இந்த நிலையில் முதல் ஓவரில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இரண்டு பேர்களும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது. தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணி 116 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் உள்ளது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ஜடேஜா எளிதாக வந்த இரண்டு கேட்ச்களை கோட்டைவிட்டார். உலகின் சிறந்த பீல்டர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜடேஜா இப்படி மிஸ்பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.