தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா.. ஐசிசி டி20 தரவரிசை பட்டியல்!
செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (08:56 IST)
ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஐசிசி டி20, ஒருநாள் போட்டிகளில் பல நாட்டு அணிகளின் வெற்றி, தோல்வியை பொறுத்து, புள்ளிகள் அடிப்படையில் தரவரிசையை வெளியிட்டு வருகிறது. இந்த தரவரிசையில் உலக டி20 போட்டிகளின் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஐசிசியின் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்திய அணி 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
261 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி தரவரிசையின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிக்கா அணி 258 புள்ளிகளுடன் உள்ளது.