இந்தியாவுக்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில் முதலில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ருத்துராஜ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் ஆஸி அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.