இந்தியா – ஆஸ்திரேலியா சுற்றுப்பயண ஆட்டம்; நாளை தொடங்குகிறது!

வியாழன், 26 நவம்பர் 2020 (15:27 IST)
ஐபிஎல் தொடர் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயண ஆட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்காக வீரர்கள் பட்டியல் வெளியான நிலையில் இந்திய் அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா அச்சம் உள்ள சூழலில் ஆஸ்திரேலியா சென்ற வீரர்களுக்கு கொரோனா சோதனையும் நடத்தப்பட்டது.

3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 ஆட்டங்கள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய – ஆஸ்திரேலிய அணியினர் விளையாட உள்ள நிலையில் முதலாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்திய நேரத்தின்படி நாளை காலை 9.10 மணிக்கு போட்டிகள் தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்