கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கொரோனாவிற்கு புதிதாக 44,488 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 92,66,705 ஆக உயர்ந்தது. நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,35,223 ஆக உயர்ந்தது. கொரோனாவில் குணமடைதோர் எண்ணிக்கை 86,79,138 ஆக உயர்ந்துள்ளது.