தவறுகளில் இருந்து பாடம் கற்கிறேன்: ஹர்திக் பாண்டியா!

திங்கள், 9 ஜூலை 2018 (16:43 IST)
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. டி20 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 
 
முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
 
இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் ஹர்திக் பாண்டியா 3 வது மற்றும் இறுதி சர்வதேச டி20 போட்டியில் 38 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பாண்டியா சிறப்பாக செயல்பட்டார்.
 
இது குறித்து அவர் பின்வருமாறு பேசினார், டி20 போட்டிகளை வேடிக்கையான ஒன்றாகவே நான் காண்கிறேன். பந்து வீச்சில் யார்கர்களுக்கு பதிலாக வேறுபட்ட வகையில் பந்து வீசுவதிலேயே நான் கவனம் செலுத்தினேன்.
 
நான் ஒவ்வொரு போட்டியிலும் எனது தவறுகளில் இருந்து கற்று கொள்கிறேன். அது எனக்கு உதவிடுகிறது. சரியான தொலைவில் பந்து வீசினால் விக்கெட்டுகளை கைப்பற்றி, மிக பெரிய அளவில் ரன்கள் விட்டு கொடுப்பதனை நிறுத்திடலாம் என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்