டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்

ஞாயிறு, 8 ஜூலை 2018 (18:44 IST)
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
இந்திய அணியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 
இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
3வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்