இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணி பற்றி விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் “நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும்போது அவர்கள் எங்களை வென்று விடுவார்களோ, என்ற அச்சம் இருக்கும். ஏனென்றால் அப்போது நிறைய மேட்ச் வின்னர்கள் அந்த அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய அணியில் அப்படிப்பட்ட வீரர்கள் இருந்தாலும், அணிக்குள் ஒற்றுமை இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறியுள்ளார்.