ரசிகருடன் தகராறில் ஈடுபட்ட வார்னர்: வைரல் வீடியோ

சனி, 24 மார்ச் 2018 (14:46 IST)
ஆஸ்திரேலியா அணி வீரர் டேவிட் வார்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகருடன் தகராறில் ஈடுபட்ட வீடியோ ஒன்று சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
 
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது.
 
இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 14 பந்தில் 30 ரன்கள் அதிரடியாக விளாசி டேவிட் வார்னர் அவுட்டானார். இதனையடுத்து, பெவியிலியன் திரும்பி கொண்டிருந்த அவரிடம் ரசிகர் ஒருவர் ஏதோ கூறினார். இதனால் கோபமடைந்த வார்னர் ரசிகருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மைதான காவலர் வார்னரை சமாதனப்படுத்தி அனுப்பினார்.
 
ஏற்கனவே இவர்  டர்பனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டி-காக்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 
 


                                                          Thanks- Trending Now
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்