3 நாட்களில் லவ் டுடே திரைப்படத்தின் கலெக்‌ஷன் இவ்வளவா?

செவ்வாய், 8 நவம்பர் 2022 (10:35 IST)
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கோமாளி. ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படமாக அமைந்தது. அந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்  இயக்கி இருந்தார். கோமாளி வெற்றியை அடுத்து இப்போது அவரே கதாநாயகனாகி இயக்கியுள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

முதல் நாள் முதல் காட்சியில் இருந்தே படத்துக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்தது. முதல் நாளில் சுமார் 6 கோடி ரூபாய் அளவில் வசூலித்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் 3 நாட்க்ளில் 14 கோடி ரூபாய் அளவுக்கு படம் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் திரையரங்குகள் மூலமாக 35 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் எனவும், படத்தின் பட்ஜெட்டை விட 4 மடங்கு லாபம் ஈட்டும் என்றும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்