அமெரிக்காவில் படையெடுக்கும் லட்சக்கணக்கான பூச்சிகள் - மனிதர்களுக்கு ஆபத்தா?
திங்கள், 25 மே 2020 (09:32 IST)
பெரும்பாலும் மண்ணுக்கு அடியில் வாழும் சில்வண்டு வகை ஒன்று 17 ஆண்டுகளுக்கு மீண்டும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோடைக்காலத்தின் தொடக்கத்தில் விரிஜீனியாவின் தென் மேற்கு பகுதி, கலிஃபோரினியாவின் வடக்கு பகுதி மற்றும் மேற்கு விர்ஜீனியாவில் இந்த பூச்சிகள் மீண்டும் தோன்றலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கு முன்பு இதே பகுதிகளில் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இந்த பூச்சிகள் தோன்றின. அதில் சில பகுதிகளில் 2013ஆம் ஆண்டு இந்த பூச்சிகள் காணப்பட்டன.
ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 மில்லியன் பூச்சிகள் வரை வரக்கூடும் என கூறப்படுகிறது.
நீண்டகாலம் வாழக்கூடிய பூச்சி வகைகளில் இதுவும் ஒன்று. இந்த பூச்சிகளால் மனிதர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனால் இந்த பூச்சிகள் பெரும் அளவில் ஒலி எழுப்பக்கூடியவை.