உலகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்கியுள்ளது. சற்றுமுன் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி உலக அளவில் 54,97,416 பேர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23,01,898 ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,46,668 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் 16,86,436 பேர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 99,300 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை கொரோனா தடுப்பு நிதிக்காக அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் அமெரிக்கா முடங்கியுள்ளதால் 2020 ஆம் ஆண்டுக்கான தனது முழு சம்பளத்தையும் அரசுக்கு விட்டுக்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 363,618 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ரஷ்யாவில் 344,481 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஸ்பெயினில் 82,852பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இங்கிலாந்தில் 259,559பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், இத்தாலியில் 229,858பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரான்ஸ் நாட்டில் 182,584பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், ஜெர்மனியில் 180,328 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.