படித்தவர்கள்தான் அமைச்சராக வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அதிகம் படித்தவர்களைவிட படிக்காதவர்களுக்குதான் கல்வியின் அருமை தெரியும். ஒரு முதல்வர் வேட்பாளரை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆகியிருப்பதன் மூலம் ஜி.டி. தேவே கௌடாவின் அரசியல் திறன் நமக்கு தெரிகிறது. நிச்சயம் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வருவார். ஒரு துறையில் சாதிக்கவும் மாற்றங்களை கொண்டு வரவும் பிரச்சனைகளை நீக்கவும் அத்துறையில் உயர்ப்படிப்பு மட்டும் படித்தால் போதாது அத்துறையில் அர்ப்பணிப்பு, அறிவுக்கூர்மை ஆகியவை வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார் முத்துச்செல்வம் என்ற ஃபேஸ்புக் நேயர்.
அமைச்சராவதற்கு கல்வி தேவையில்லை, நேர்மையும் நல்ல மனமும் இருந்தால் போதும், காமராஜரைப் போல என்று சரோஜா பாலசுப்ரமணியன் ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார்.