கன்னி-வீடு-குடும்பம்
இவர்கள் கூட்டு குடும்பத்தில் தான் இருப்பார்கள். ஆனாலும் வெளியில்தான் மதிப்பு இருக்கும். குடும்பம் பிரிவதை ஏற்க மாட்டார்கள். அரசியலில் ஈடுபாடு இருக்கும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தாங்கிக் கொள்வார்கள். அக்கம், பக்கம் உள்ளவர்கள் தொந்தரவு செய்வார்கள். குடும்பத்திற்காக அக்கறை காட்டுபவர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த கஷ்டம் வந்தாலும் மற்றவர்களுக்கு நன்மையே செய்வார்கள். ஆனாலும் இவர்களுக்கு குடும்பத்தில் மதிப்பு இருக்காது. இருந்தாலும் தன் கடமையை செய்பவர்கள் இவர். அண்ணன், தம்பி, நண்பர்கள், உறவினர்கள் இவர்கள் மீது பாசம் காட்டுவார்கள். இவர்களுக்கு வீட்டிலும், வெளியிலும் உதவி கிடைக்கும்.