காலை கடன்களை முடித்துவிட்டு 10 நிமிடம் கழித்து ஆசனங்களை செய்யத் துவங்கவேண்டும். குளிப்பதற்கு முன்போ அல்லது பின்போ ஆசனங்களை செய்யலாம். ஆனால் கட்டாயம் அரைமணி நேரம் இடைவெளி இருப்பது அவசியம். குளிர்ந்த நீரில் குளித்த பிறகு ஆசன பயிற்சி செய்தால், உடலை வளைப்பதற்கு சுலபமாக இருக்கும்.
ஆரம்பத்தில் குறைந்த நேரமும், பிறகு அதிக நேரமும் பயிற்சி செய்யலாம். ஒரு ஆசனத்தை செய்த பிறகு அடுத்த ஆசனத்தை செய்வதற்கு 15 அல்லது 20 வினாடி (4 முதல் 5 மூச்சு) ஓய்வு கொள்ள வேண்டும். இவற்றை மனதில் நிறுத்தி ஆசனங்களை செய்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும். அன்றாடம் சில நிமிடங்கள் தவறாமல் யோககலையை பயிற்சி செய்து வந்தாலே போதும் நம் உடல் ஆரோக்கியத்துடன் வாழலாம்.