யோகா என்றால் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?

வியாழன், 15 ஜூன் 2017 (13:44 IST)
யோகா என்ற சொல் வடமொழி சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் கவனத்தை ஒருமுகப்படுத்துவது என்பதாகும்.


 
 
உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒரு முகப்படுத்துவதே யோகக் கலை. இதற்கு சங்கமம் என்ற பொருளும் உண்டு.
 
யோகாவால் ஏற்படும் நன்மைகள்:
 
# உடலின் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன. அதனுடன் சேர்ந்து புத்துணர்ச்சி பெருகின்றது.
 
# ரத்த ஓட்டம் சீரடைந்து, நல்ல சிந்தனை, செயல் உண்டாகும்.
 
# முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதோடு, ஆயுள் நீடிக்கும். 
 
# நோய்கள் வராமல் தடுக்கலாம். வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். 
 
# உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்பு, இரத்த ஓட்டம், ஜீரணம்) சீரடையும்.
 
# கோபம் பயம் நீக்கும். என்றும் இளமையாய் இருக்கலாம்.
 
# அதிகப்படியான உடல் எடை கண்டிப்பாக குறைந்துவிடும். 
 
# யோகா சுவாகக் கோளாறை சரிசெய்து, மூளையையும், உடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகின்றது.
 
# மூளையின் உட்பிரிவு சம்பந்தமான பிரச்சினைகளை சரிசெய்கின்றது. 
 
# யோகாவின் மூலம் தசைகள் தளர்வடைவதால் முதுகு வலி, கால் வலி போன்ற வலிகளில் இருந்து விடுபடலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்