நாடாளுமன்ற சேனலை முடக்கிய யூட்யூப்! – செம கடுப்பான ரஷ்யா!

ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (08:57 IST)
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்யாவுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில் ரஷ்யாவின் நாடாளுமன்ற சேனலை யூட்யூப் முடக்கியுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்து பல பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் இந்த போருக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஏற்கனவே ரஷ்யாவின் அரசு சேனல்களை முடக்கிய யூட்யூப் நிறுவனம் தற்போது ரஷ்ய நாடாளுமன்ற கீழவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டூமா என்ற சேனலையும் முடக்கியுள்ளது. யூட்யூபின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்