கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் முடங்கியுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது, உயிரிழப்புகள் 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் உயிரிழப்புகள் கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், இத்தாலியில் 17,669 பேரும், ஸ்பெயினில் 14,792 பேரும், பிரான்சில் 10,869 பேரும் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் என செய்திகள் வெளியாகியுள்ளது.