சென்னையில் தங்கி கொரோனாவை பரப்பிய வங்கதேசத்தினர்: அதிர்ச்சித் தகவல்

வியாழன், 9 ஏப்ரல் 2020 (08:12 IST)
கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒருபுறம் அரசும் மக்களும் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில் இன்னொரு புறம் ஒரு சிலர் கொரோனா வைரஸை தெரிந்தும் தெரியாமலும் பரப்பி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அந்த வகையில் சென்னை பெரியமேடு என்ற பகுதியில் தங்கி உள்ள மூன்று வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை கொரோனா வைரசை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு பரப்பியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை பெரியமேடு பகுதியில் ஒரு வீட்டில் வங்கதேசத்தை சேர்ந்த மூவர் ரகசியமாக தங்கி இருந்ததால், சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களிடம் சென்று விசாரணை செய்தபோது அவர்கள் மூவரும் வங்கதேசத்தினர் என்று தெரியவந்தது
 
இதனை அடுத்து அவர்கள் உடனடியாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சோதனை செய்தபோது மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் கொரோனாவை சென்னையில் பரப்பும் நோக்கத்துடன் மூவரும் இருந்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 வங்கதேசத்தினர் சென்னையில் தங்கி கொரோனா வைரசை பரப்ப முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்