இன்று காலையிலேயே 8 மாவட்டங்களில் மழை.. விநாயகர் சதூர்த்தி கொண்டாட திட்டமிடுங்கள்..!

Siva

புதன், 27 ஆகஸ்ட் 2025 (08:38 IST)
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விநாயகர் சதூர்த்தி கொண்டாடுபவர்கள் முன்கூட்டியே அதற்கு தேவையான பொருட்களை வாங்கி திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
இன்று காலை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியல்:
 
நீலகிரி
 
மதுரை
 
திருவள்ளூர்
 
சென்னை
 
கோயம்புத்தூர்
 
தேனி
 
விருதுநகர்
 
தென்காசி
 
இந்த மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்