விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? எல்.கே.சுதீஷ் தகவல்

ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (13:52 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரனோ தோற்று பரவி இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் தேமுதிக தலைமைக் கழகம் விஜயகாந்துக்கு கொரோனா இல்லை என்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது 
 
ஆனால் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விஜயகாந்துக்கு இலேசான கொரனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்துக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர் 
 
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்த தகவலை அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் நாளை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என சுதீஷ் தகவல் தெரிவித்து உள்ளதால் தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்
 
விஜயகாந்த் டிஸ்சார்ஜ் ஆகி, வீடு திரும்ப உள்ளதால் அவர் கொரனோவில் இருந்து குணமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்