கொரோனா அப்டேட்: உலக பாதிப்பு நிலவரம் என்ன??

சனி, 19 டிசம்பர் 2020 (08:31 IST)
தற்போதைய நிலவரப்படி உலக அளவில் 7,59, 74,115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

 
உலகின் 218 நாடுகள் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி, 7,59,74,115 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியே 32 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 16,80,116 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,10,52,140 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,920 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்