சிறுநீரக பிரச்சனை என நினைத்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி: மருத்துவர்கள் வியப்பு

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (10:40 IST)
அமெரிக்காவில் சிறுநீரக பிரச்சனை என நினைத்து மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது.

அமெரிக்காவில் சவுத் டகோட்டா மாகாணத்தில் ஆஸ்டின்-டேனட் ஆகிய தம்பதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டேனட்டுக்கு அடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக டேனட் நினைத்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி, டேனட்டுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது கணவர் ஆஸ்டின், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பரிசோதனையில் டேனட் பிரசவமாகி 34 வாரங்கள் ஆனது தெரியவந்தது.

மேலும் டேனட்டுக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்றும் தெரியவந்தது. உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அந்த பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. அதில் இரண்டு குழந்தை பெண் குழந்தை.

3 குழந்தைகளும் ஆரோக்கியமாக பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனால் டேனட்டும் அவரது கணவரும் ஆச்சரியத்தால் வியந்து போயினர். அந்த மூன்று குழந்தைகளுக்கும் பிளேஸ், ஜிப்சி, நிக்கி என பெயர் வைத்துள்ளனர்.

ஆஸ்டின்-டேனட் தம்பதியருக்கு ஏற்கனவே 10 வயதில் ரோன்னி என்று ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்