பெண்கள் என்.ஜி.ஓக்களில் பணியாற்றக்கூடாது- தாலிபன்கள் உத்தரவு

சனி, 24 டிசம்பர் 2022 (23:31 IST)
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் என்.ஜி.ஓக்களில்  பெண்கள் யாரும் பணியாற்றக் கூடாது என தாலிபன் கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆஃப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க படைகள் அங்கிருந்து வாபஸ் பெறப்பட்டதால், ஆப்கானிஸ்தான் ஆட்சியை தாலிபான்கள் கைப்பற்றினர்.

இந்த நிலையில், பழமைவாதிகளாக தாலிபான்கள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தாலிபான்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளனர்.

இதனால், பெண்கள் அதிர்ச்சி அடைந்து, இந்த உத்தரவுக்கு எதிராக போராட்டத்தில் ஈட்டுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  மக்களின் போராட்டத்தை அடைக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அந்த நாட்டில் உள்ள உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு என்.ஜி.ஓக்களில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று புதிய உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றாமல் என்.ஜி.ஓக்களில் பெண்கள் அமர்த்தப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு  குறித்த கடிதத்தை  நிதித்துறை மந்திரி காரிதின் முகமது ஹனிப்  அமைப்புகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்