கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மணிப்பூரைச் சேர்ந்த பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு(24) 53 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், சஞ்சிதா சானுவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்திருப்பதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.