விடுமுறை இல்லாமல் தொடர்ந்து 103 நாட்கள் வேலை.. ஊழியரின் பரிதாப முடிவு..!

Siva

ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (08:04 IST)
விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து 103 நாட்கள் வேலை செய்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பதும் வாரம் முழுவதும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வு இருந்தால் மட்டுமே அவர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியும் என்பதற்காகவே இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சீனாவில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை தொடர்ந்து 103 நாட்கள் வேலை செய்த ஊழியர் ஒருவர் 104 வது நாள் வேலைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதனை செய்தபோது அவருடைய உறுப்புகள் செயல் இழந்ததாக கூறப்படுகிறது.

30 வயதான அந்த நபர் கிழக்கு சீனாவில் உள்ள ஜின்ஜியாங் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் ஒப்பந்த அடிப்படையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம்  பெயிண்டர் வேலைக்கு சேர்ந்த நிலையில் 103 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

104வது நாள் உடல்நலக்குறைவால் அவர் மரணம் அடைந்த நிலையில் விடுமுறை அளிக்காமல் வேலை வாங்கியதாக அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கில் 400,000 யென்கள் லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை பளு காரணமாக அதிக உயிரிழப்புகள் நடந்து வருவதால் வேலைப்பளுவை குறைக்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு தேவையான ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்