இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிடுகிறார். சமகி ஜன பலவாகயா கட்சி சார்பில் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். மேலும் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற கட்சி வேட்பாளர் அனுர குமார திஸநாயக மற்றும் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். கொழும்புவில் உள்ள வாக்குச்சாவடியில், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே குடும்பத்தினருடன் வந்து வாக்களித்து சென்றார். இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெறுபவர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இலங்கை மக்கள் தொகை 1.7 கோடியாக உள்ள நிலையில், இதில் 40 லட்சம் பேர் தமிழர்கள் ஆவார்கள். இதனால் தமிழர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்த பிறகு சிறிது நேரம் இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு இன்று இரவு 9 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கி நடைபெற உள்ளது. இலங்கையை பொறுத்தவரை வாக்குச்சீட்டு முறை தான் நடைமுறையில் உள்ளது.