110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு

வியாழன், 30 ஜூன் 2022 (15:39 IST)
உலகில் 110 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 
 
இந்தியா உள்பட தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சீனாவில் மிக அதிகமாக கொரோனா அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து ஒரு சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலகின்110 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது
 
இன்னும் கொரோனா முடியவில்லை என்றும் அதனால் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்