கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்!

புதன், 3 நவம்பர் 2021 (18:56 IST)
இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து இப்போது மக்களை காப்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று தடுப்பூசி களில் ஒன்று கோவாக்சின் என்பது தெரிந்ததே 
 
இந்தியர்களில் ஏராளமானோர் கோவாக்சின் தடுப்பூசி தான் செலுத்தி உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார மையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது 
 
இதனை அடுத்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்