இம்மாதத்தில் இன்றே கடைசி... மக்களே தவறவிட்ராதீங்க...!!!

சனி, 30 அக்டோபர் 2021 (08:41 IST)
தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் 7 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. 

 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஒன்ரறை மாதத்திற்கும் மேலாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அடுத்த வாரத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இப்போதே பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவியத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் இன்று துவங்கியுள்ளது. 
 
ஆம், தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் 7 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மும்முறை மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்