ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசா? தாலிபான்கள் மறுப்பு!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (07:48 IST)
ஆப்கானிஸ்தானில் முன்னாள் உள்துறை அமைச்சர் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என்று வெளிவந்த செய்தியை தாலிபான்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்
 
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் தற்போது தாலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது என்பவர் தலைமையில் இடைக்கால அரசு அமையும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த செய்தியை தாலிபான்கள் அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது
 
தாலிபான்கள் தலைவர் அப்துல் கனி தலைமையில் ஆப்கானிஸ்தானில் அரசு அமையும் என்றும் புதிய அதிபராக அப்துல்கனி தேர்வு செய்யப்படுவார் என்றும் தாலிபான்கள் அரசியல் பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார் 
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பெயரில் பாகிஸ்தான் சிறையில் இருந்து அப்துல் கனி விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்துல் கனி தலைமையிலான புதிய அரசு விரைவில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்