குரங்கு அம்மை நோய் பரவுவதால் குரங்குகளை கொல்லும் பொதுமக்கள்: WHO அதிரடி முடிவு!
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (18:30 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என நினைத்து பல பொதுமக்கள் குரங்குகளை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை அடுத்து குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்திருப்பதாகவும் புதிய பெயரை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்றும் கூறப்படுகிறது
1958ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் தற்போது குரங்குகளின் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக இந்த நோயின் பெயரை மாற்ற உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது