ஒலிம்பிக்கில் கொரோனா பரவுவதை தடுக்க முடியாது! – உலக சுகாதார அமைப்பு!

வியாழன், 22 ஜூலை 2021 (10:30 IST)
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் அதில் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கொரோனா காலத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவது குறித்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “கொரோனா பாதிப்பு புள்ளி விவரத்தை வைத்து ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பரவுதலை குறைத்து மதிப்பிட முடியாது. கொரோனாவால் பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்களை உடனடியாக கண்டறிந்து தனிமைப்படுத்தினால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தலாம்”என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்