ஈரானில் கொரோனா ஊரடங்குக்கு பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் மத வழிபாட்டு தளங்களுக்கு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த அந்நாட்டின் பளு தூக்கும் வீரர் ரேஸா தப்ரிஸி, புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஜிம்முக்கு செல்லக் கூடாது என்பது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.