மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

Mahendran

சனி, 30 ஆகஸ்ட் 2025 (14:15 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கு அருகில் உள்ள காந்திகுப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி எதிர்பாராத திருப்பத்துடன் முடிவடைந்தது. இந்த நிகழ்வில், மணமகனின் நண்பர்கள் சிலர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு, மணமேடைக்கு சென்று மணமகளை நடனமாட வற்புறுத்தியுள்ளனர். 
 
அவர்களின் அநாகரிகமான இந்த செயல் மணமகள் தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. 
 
இந்த அவமானம் தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த மணமகள், உடனடியாக திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறினார். மணமகளின் இந்த திடீர் முடிவு, திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. 
 
இச்சம்பவம் சமூகத்தில் மதுப்பழக்கம் ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்