இதில், அவர் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கிடைத்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதக வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில், லாசூர் நீதிமன்றம், இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவரமுடியா பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இந்த உத்தரவை அடுத்து, இம்ரான்கான் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.
அதன்பின்னர்,. தொலைக்காட்சி மூலம் பேசிய இம்ரான்கான் ஆளும் அரசிற்கு எதிராக விமர்சனம் கூறினார்.
இதையடுத்து,இம்ரான்கான் சார்பில் பலூசிஸ்தான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இம்ரான்கானுக்கு எதிரன பிரிவாரண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது.