16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றேன்.. அமைச்சரின் சர்ச்சை பேட்டியால் பறிபோன பதவி..!

Mahendran

சனி, 22 மார்ச் 2025 (14:06 IST)
16 வயது மாணவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக ஐஸ்லாந்து நாட்டின் பெண் அமைச்சர் தெரிவித்ததால்,  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஐஸ்லாந்து  நாட்டின் பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,  அவருடைய அமைச்சரையில்  ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் என்பவர் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தார். 58 வயதான இவர், சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
அப்போது, தனக்கு 22 வயதாக இருந்தபோது, 16 வயது மாணவர் ஒருவருடன் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக கூறினார். இந்த பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து, பிரதமர் கிறிஸ்ட்ரூன் ப்ரோஸ்டாட்டிர் அவரை அலுவலகத்திற்கு வரவழைத்து பேசினார். அதன் பின்னர், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம், ஐஸ்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்