ஈரானுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக தெரிவித்து வரும் நிலையில், இவ்வாறு நடந்தால், போர் அபாயம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதனால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.