ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் உள்ள ஒரு மலைப்பாம்பு ஒன்று, கடற்கரையில் மக்கள் உபயோகிக்கும் ஒரு துண்டை விழுங்கியுள்ளது. அதன் உரிமையாளர்கள் பாம்பை எடுத்துக் கொண்டு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, மலைப்பாம்பை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய முற்பட்டால் அது பாம்பு உயிருக்கே ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது என கருதி, பாம்பின் வாயில் வழியே ஒரு கருவியை நுழைத்து,அந்த துணியை எடுக்க முடிவு செய்து, பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு துணியை வெளியே எடுத்தனர்.