இவ்ளோ பெரிய வாயா? வாயை திறந்தே கின்னஸ் சாதனை படைத்த பெண்!

வெள்ளி, 30 ஜூலை 2021 (13:22 IST)
பலவேறு வகைகளில் பலர் கின்னஸ் சாதனை படைத்து வரும் நிலையில் அமெரிக்க பெண் ஒருவர் அதிக நீளத்திற்கு வாயை திறந்தே கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உலகம் முழுவதும் பலர் அசாத்தியமான செயல்களை புரிந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் தங்களது பெயரை இடம்பெற செய்து வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த சமந்தா என்ற பெண் புதிய வகை கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்,

அமெரிக்காவை சேர்ந்த சமந்தா அதிக நீளத்திற்கு வாயை திறப்பதில் திறமைசாலியாக இருந்து வருகிறார். அவரது இந்த திறமையை அவர் டிக்டாக் மூலமாக வெளிப்படுத்தி பிரபலமானார். இந்நிலையில் தற்போது நீண்ட முயற்சிக்கு பிறகு தனது வாயை 6.52 செ.மீ நீளத்திற்கு திறந்து புதிய சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்