அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அடுத்தாண்டு அதிபர் தேர்தல் வரவுள்ள நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன், தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக தகவல் வெளியானது.
அங்கு, புனித வெள்ளி சமாதான ஒப்பந்தத்தின் 25 வது ஆண்டு விழாவில் அவர் பங்கேற்றார். மேலும், இப்பயணத்தின் மூலம் அயர்லாந்தின் தொழில் முதலீடுகள் அதிகரிப்பது குறித்து அந்த நாட்டுடன் அதிபர் பைடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் மார்ட்டினுடன் கார்லிங்போர்ட் கோட்டைக்கு அதிபர் பைடன் சென்றார். அவருக்கு கொட்டும் வரவேற்பு அளிப்பதற்காக மக்கள் கொட்டும் மழையில் குடைபிடித்த படி நின்றிருந்தனர்.