அமெரிக்காவில் பொதுமக்கள் அனைவரும் துப்பாக்கி பயன்படுத்த லைசென்ஸ் உள்ள நிலையில் துப்பாக்கி பயன்பாடு அதிகமாக உள்ளது. இதனால் அடிக்கடி பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதும் பொதுமக்கள் பலியாவதும் அதிகரித்துள்ளது. சில மாதங்கள் முன்பாக பள்ளி ஒன்றில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான சிறுவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி கடந்த 6 மாதங்களில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் 19,808 பேர் பலியாகியுள்ளனர். இதில் 827 பேர் 17 வயதிற்கு குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் 16,817 பேர் படுகாயமடைந்துள்ளனர்.