இது உங்கள் சொத்து!.. இந்திய கலைபொருட்களை திரும்ப கொடுத்த அமெரிக்கா!

ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (09:14 IST)
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் இந்தியாவை சேர்ந்த புராதான கலைப்பொருட்களை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் 24ம் தேதி நடைபெற்றது. இதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த 22ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

அங்கு அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிலிருந்து முந்தைய காலங்களில் திருடப்பட்ட 157 கலைப்பொருட்களை அமெரிக்கா பிரதமர் மோடியிடம் ஒப்படைத்துள்ளது. இவற்றில் 71 கலாசார பொருள்கள், இந்து மதம் தொடா்பான 60 சிலைகள், பெளத்த மதம் தொடா்பான 16 சிலைகள், சமண மதம் தொடா்பான 9 சிலைகள் அடங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்