அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:20 IST)
உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71) 43-வது அதிபராக பதவி வகித்தவர். கடந்த ஜனவரி மாதம் ஜார்ஜ் புஷ்சும் பார்பரா புஷ்சும் தங்களது 73வது திருமண நாளை கொண்டாடினார்கள். 
 
அல்சர் மற்றும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பார்பரா புஷ், ஏப்ரல் 17 ந் தேதி மரணமடைந்ததார். அவரது இறுதி சடங்கு சமீபத்தில் நடைபெற்றது. 
இந்நிலையில் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்