ரஜினியுடன் துக்ளக் குருமூர்த்தி திடீர் சந்திப்பு

திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை செய்து கொண்டிருக்கின்றார். ஆன்மீக அரசியல் செய்ய போவதாக கூறி வரும் ரஜினியை ஏற்கனவே பாஜக ஆதரவாளர் என்றும், காவியின் தூதுவன் என்றும், ஒருசில அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளரும், துக்ளக் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி இன்று ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும், ரஜினியின் அரசியல் கட்சி குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
தனக்கு பின்னால் பாஜக இல்லை, மக்கள் மட்டுமே உள்ளனர் என ரஜினிகாந்த் அறிவித்திருக்கும் நிலையிலும், இன்றிரவு ரஜினி அமெரிக்கா செல்லவுள்ள நிலையிலும் திடீரென அவர் குருமூர்த்தியை சந்தித்துள்ளது பல ஊகங்களுக்கு காரணமாக உள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்