கள்ளக்காதலில் ஈடுபட்ட ஆசை மகள்! அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய தந்தை! - மும்பையில் அதிர்ச்சி!

Prasanth K

புதன், 27 ஆகஸ்ட் 2025 (11:22 IST)

மகாராஷ்டிராவில் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணையும், கள்ளக்காதலனையும் தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் பகுதியில் உள்ள போர்ஜூனி என்ற கிராமத்தை சேர்ந்த இளம்பெண் சஞ்சீவானி. இவருக்கு கடந்த சில ஆண்டுகள் முன்னதாக திருமணமான அநிலையில் கோலேகாவ் பகுதியில் கணவருடன் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த லகான் பண்டாரே என்ற இளைஞருடன் சஞ்சீவானிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு லகானை சென்று சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த சஞ்சீவானி, நாளடைவில் வீட்டிற்கே லகானை அழைத்து வந்து உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

 

இதை சஞ்சீவானியின் மாமியார் கண்காணித்து வந்த நிலையில் ஒருநாள் இருவரையும் கையும் களவுமாக வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, சஞ்சீவானியின் தந்தைக்கு தகவல் சொல்லியுள்ளார். சொந்தக்காரர்களோடு வந்த சஞ்சீவானியின் தந்தை தனது மகளால் தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து ஆத்திரமடைந்துள்ளார்.

 

காரில் அவர்கள் இருவரையும் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்ற அவர்கள் காரிலேயே வைத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவர் கை, கால்களையும் கட்டி அப்பகுதியில் இருந்த கிணறு ஒன்றில் வீசிக் கொன்றுள்ளனர். அதன்பின்னர் சஞ்சீவானியின் தந்தை அவராகவே சென்று போலீஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்