அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் தங்கள் கருவை விருப்பப்பட்டால் கலைத்துக் கொள்ளும் உரிமை இருந்து வருகிறது. இதற்கான கருக்கலைப்பு மாத்திரைகள் கூட அமெரிக்க மருத்துவ சந்தைகளில் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில் கருக்கலைப்பு சட்டத்தை தடை செய்ய மேற்கொள்ளப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் டெக்சாஸ் மற்றும் வாஷிங்க்டன் நீதிமன்றங்கள் இரு வேறு தீர்ப்புகளை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருகலைப்பு உரிமையை ரத்து செய்ய முடியாது என பெண்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அமெரிக்க உச்சநீதிமன்றம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. இதனால் பெண்கள் கருத்தடை மற்றும் கருகலைப்பு மாத்திரைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.