சிரியாவை கிளர்ச்சியாளர் குழு கைப்பற்றியுள்ள நிலையில், சிரியாவில் அமெரிக்க வான்வழி படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சி நடந்து வந்த நிலையில் அவருக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் உருவாகின. கடந்த 2011 முதலாக இந்த கிளர்ச்சி குழுக்களுக்கும், சிரிய ராணுவத்திற்கும் உள்நாட்டு போர் நடந்து வந்த நிலையில் தற்போது கிளர்ச்சி படையினர் சிரிய தலைநகரை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து தப்பித்த அதிபர் அசாத் ரஷ்யாவில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவை கிளர்ச்சி படைகள் கைப்பற்றியுள்ளதற்கு அமெரிக்க வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்தோடு நில்லாமல் சிரியாவில் பதுங்கு தளம் அமைத்து அமெரிக்காவிற்கு தொல்லை கொடுத்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை அழிப்பதில் அமெரிக்கா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
சிரியாவை கிளர்ச்சி படைகள் கைப்பற்றிய சில நாட்களிலேயே சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பதுங்கு தளங்கள் மீது அமெரிக்க ராணுவத்தின் வான்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் பி52, எஃப் 15 எஸ், ஏ-10 எஸ் ஆகிய போர் விமானங்கள் சிரியாவில் தாக்குதல்களை நடத்தியுள்ளன என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K