கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல், ஜெட் ஏர்வேஸ் கடன் மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக சேவையை நிறுத்தியது. இதனை அடுத்து, நிறுவனத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்கு அனுமதியும் கிடைத்தது.
இந்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 538 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐக்கு கனரா வங்கி புகார் அளித்ததால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் மற்றும் மனைவி அனிதா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில், 5 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாததால், இந்த நிறுவனத்தின் வாங்கப்பட்ட கடன்களை அடைக்க சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.