பேஸ்புக்கை தொடர்ந்து இன்ஸ்டாகிராமுக்கும் ரஷ்யா தடை!

சனி, 12 மார்ச் 2022 (09:26 IST)
ரஷ்யாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டதை தொடர்ந்து இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ளது.

 
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வசமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. போர் குறித்து சமூக வலைதளங்களில் பல வதந்திகள் பரவி வருவதை தவிர்க்கும் வகையில் ரஷ்யாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டது. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் இன்ஸ்ட்டாகிராமுக்கு தடை விதித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா குழுமத்திற்கு எதிராக குற்ற நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளது.
 
ரஷ்யா மீதான வெறுப்பு கருத்துகளை அனுமதிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனம் விதிகளை தளர்த்தியதால் ரஷ்யா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்